ரயில்வேத் தேர்வு! தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும்! இல்லையென்றால் போராட்டம்-முக ஸ்டாலின் அறிக்கை!

20 September 2019 அரசியல்
mkstalin-election.jpg

ரயில்வேத் தேர்வில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ள தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், வட இந்தியாவினைச் சேர்ந்தவர்கள். மேலும், திருச்சியில் உள்ள பொன்மனை பணிமனையில் நடத்தப்பட்டத் தேர்வில் 300 வட இந்தியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், ஒரு தமிழர் கூட தேர்ச்சி பெறவில்லை.

அதே போல், ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் நடத்தப்பட்ட தேர்வில், 1600 வட இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 1765 இடங்களில் இவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும மாநில அரசு அலுவலகங்களில், வட மாநிலத்தரவகளை அதிக அளவில் நியனம் செய்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபீரத விளையாட்டை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.

எல்லாவற்றையும், வடமாநிலத்தவர்களுக்கு வாரி வழங்கி, தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாது. இதனால், இளைஞர்களைத் திரட்டி, மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டியக் கட்டாயம் ஏற்ப்பட்டு விடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

(அறிக்கையின் சுருக்க வடிவம் இது.)

HOT NEWS