முக ஸ்டாலின் காட்டும் குறும்படம்! பிக்பாஸாக மாறிய முகஸ்டாலின்!

13 February 2021 அரசியல்
mkstalincampaign.jpg

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டித் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முகஸ்டாலின், குறும்படம் ஒன்றினை வெளியிட்டார்.

தற்பொழுது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையினை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தீவிரமாக செய்து வருகின்றன. இதில், முக ஸ்டாலின், தற்பொழுது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்றத் தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும், மக்களின் குறைகளை அங்கு வைக்கப்படுகின்ற புகார் பெட்டியில், புகாராக போடலாம் எனவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தனித்துறையானது அமைக்கப்பட்டு 100 நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்து வருகின்றார்.

அந்த வரிசையில், நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிப் பகுதியில் பொன்முடிக்கு ஆதரவு கேட்டு, முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, அதிமுக அமைச்சர்களையும், அரசினையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு அதிமுகவினர் எவ்வித நன்மையும் செய்யவில்லை எனவும், அது குறித்த குறும்படம் ஒன்றினையும் திரையிட்டுக் காண்பித்தார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

HOT NEWS