ரேபிட் கிட்டில் ஊழல்! எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு!

28 April 2020 அரசியல்
mkstalinlatest1.jpg

ரேபிட் கிட்டில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, தமிழக எதிர்கட்சித் தலைவர் முகஸ்டாலின் பகிரங்கமாக, குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது, பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தக் கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டுபிடிக்க ரேபிட் டெஸ்ட் கருவிகளை, மத்திய அரசு இறக்குமதி செய்தது.

அந்தக் கருவியினை தமிழக அரசும் வாங்கியது. சுமார், 50,000 கருவிகளை தமிழக அரசு பணம் செலுத்திப் பெற்றது. ஒவ்வொருக் கருவியும் 600 ரூபாய்க்கு வாங்கப்பட்டு உள்ளன. இது மாபெரும், சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு விலைக்கு, இந்தக் கருவியானது விற்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தக் கருவியில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான முகஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையைக் குறைத்து டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழை. ரூ. 245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட்கிட்டிற்கு, அதிமுக அரசு ரூ.600 ரூபாய் கொடுத்தது ஏன்? ICMRன் அங்கீகாரமில்லாத நிறுவனத்திற்கு கொள்முதல் ஆர்டரைக் கொடுத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரேபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியுள்ள அதிமுக அரசின் முகமூடிகளை கிழிக்கும் வகையில், இனி ரேபிட் டெஸ்ட் கிட்களை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 400 ரூபாய்க்கு மிகாமல் வாங்க வேண்டும் என,டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை, இதயப்பூர்வமாக வரவேற்கின்றேன். சீன தயாரிப்பு நிறுவனம், ஒரு கருவியினை 225 ரூபாய்க்கு விற்பதாகவும், இறக்குமதி செய்ய ஆகும் செலவு 20 ரூபாய் எனவும், ஆக ஒரு கிட் விலை 245 ரூபாய் என்றும் நீதிமன்ற விசாரணையில் தெரிய வருகின்றது. ஆனால், அதிமுக அரசு 600 ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றது.

விலை மட்டும் அதிகமில்லை, ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடமிருந்து, வாங்காமல், ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருப்பதும் வழக்கு விசாரணையில் வெளிவந்துள்ளது. 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு, அதிமுக அரசு 600 ரூபாய் கொடுத்து, நிதிப்பற்றாக்குறையிலும் கூட வெளிப்படைத் தன்மையற்ற கொள்முதலுக்கு வித்திட்டது ஏன்? ஐசிஎம்ஆர் அங்கீகரித்த நிறுவனங்களைத் தவிர்த்து விட்டு, இடைத்தரகு நிறுவனத்திற்கு ஏன் ஆர்டர் வழங்கப்பட்டது? அதுமட்டுமில்லை-கருவிகள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைத்த முடிவுகள் துல்லியமானதா?

இந்தக் கேள்விகளை அரசியல் என்று சொல்லிக் கடந்துபோக முயற்சி செய்யக் கூடாது. இது மக்களின் கருவூலத்தினை, கரையான் அரிக்கும் காரியம் ஆகும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

HOT NEWS