எப்பொழுதுமே, அரசியல் பிரபலமும், சினிமாப் பிரபலமும் சந்தித்துக் கொண்டால் போதும், ரசிகர்களும் தொண்டர்களும் ஒரே குஷியாகிவிடுவர். அந்த வரிசையில் தான் தற்பொழுது ஒரு மகிழ்ச்சிக்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
மறைந்த திமுக தலைவர் திரு. மு.கருணாநிதியின் பேத்தியான ஓவியாவிற்கும், தொழிலதிபர் ஜெயபிரகாஷ் அவர்களின் மகன் அக்னீஸ்வரனுக்கும் இடையே, சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் திமுகவினரைத் தவிர்த்து, ஒரு சில நட்சத்திரங்களே அழைக்கப்பட்டனர்.
கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் என ஒரு சிலப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், சினிமாவின் தளபதி விஜயை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனை விஜயின் ரசிகர்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.