ஜனவரி 29ல் தேர்தல் பிரச்சாரம்! முதல்வன் படத்தை போல் புகார் பெட்டி!

25 January 2021 அரசியல்
mkstalin.jpg

வருகின்ற ஜனவரி 29ம் தேதி அன்று, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக, திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், வருகின்ற ஜனவரி 29ம் தேதி அன்று, தன்னுடையத் தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்தார். அத்துடன், முதல்வன் பட பாணியில் புகார் பெட்டியும் வைக்கப்பட உள்ளது போன்று, புகார் பெட்டி வைக்க உள்ளாராம் முக ஸ்டாலின். அவர் பேசுகையில் திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தின் அடுத்தக் கட்டத்தினை ஆரம்பிக்க உள்ளேன் எனவும், ஒவ்வொரு தொகுதியிலும் புகார் பெட்டி வைக்க உள்ளதாகவும், அதில் நீங்கள் புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

அந்தப் பெட்டியில், தங்களுடைய புகார்கள் மற்றும் குறைகளை போடலாம் எனவும், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அந்தப் புகார்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தன்னுடையத் தேர்தல் பிரச்சாரத்தினை, திருவண்ணாமலையில் தொடங்க உள்ளதாகவும் முதல் 30 நாட்களுக்கு இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

HOT NEWS