நான் காதலித்தே திருமணம் செய்து கொண்டேன்! எம்எல்ஏ பிரபுவின் மனைவி வாக்குமூலம்!

07 October 2020 அரசியல்
kallakurichimla.jpg

நான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவினை, காதலித்தே திருமணம் செய்து கொண்டேன் என, அவருடைய மனைவி சௌந்தர்யா தெரிவித்து உள்ளார்.

40 வயதைக் கடந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, கல்லூரியில் பிஏ படித்து வந்த சௌந்தர்யா என்றப் பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால், அந்தப் பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனுவினைத் தாக்கல் செய்தார். அது குறித்து தற்பொழுது அந்தப் பெண் சௌந்தர்யா விளக்கமளித்து உள்ளார்.

அதன்படி, தான் காதலித்தே பிரபுவினைத் திருமணம் செய்து கொண்டதாகவும், யாரும் அச்சுறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை எனக் கூறியுள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணையானது இன்று நடைபெற உள்ளது.

HOT NEWS