மஹாராஷ்டிராவில் திடீர் திருப்பம்! பதவிப் பிரமாணம் சட்டத்திற்கு புரம்பானது!

24 November 2019 அரசியல்
udhavthakrey.jpg

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்தது சட்டத்திற்குப் புரம்பானது என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கினை நாளை (25-11-2019) காலை 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளதாக கூறியுள்ளது.

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டாக இணைந்து, ஆட்சியமைக்க முடிவு செய்து பேட்டி அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக ஆட்சியமைத்தது. மேலும், தங்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், தங்களுடைய கட்சியின் ஆதரவு இருப்பதாக பதவிப் பிராமணத்தின் பொழுது தன்னுடைய ஆதரவுக் கடிதத்தினை அளித்தார். மேலும், பாஜகவுடன் விவசாயிகளின் நலனுக்காகவும், மஹாராஷ்டிராவின் நலனுக்காகவும் கூட்டணி வைப்பதாகக் கூறினார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பாவரே எதிர்பார்க்கவில்லை.

இதனையடுத்து, தன்னுடைய கட்சியில் இருந்து தன்னுடைய அண்ணன் மகன் அஜித்பவாரை நீக்கினார் சரத் பவார். தன்னுடைய ஆதரவு கண்டிப்பாக பாஜகவிற்கு கிடையாது எனவும், மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சியே அமையும் எனவும் கூறினார். இதனையடுத்து, தற்பொழுது சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் என அனைவரையும், மும்பையில் உள்ள லலித் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, இன்று காலையில் பாஜக எம்பி சந்தித்து பேசினார். பின்னர், இன்று மாலையில், சிவசேனா கட்சியின் தலைவர்கள், ஆதித்யா தாக்ரே மற்றும் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர், சரத்பவாரின் மகள் சுப்ரியா ஷிண்டேவினை சந்தித்துப் பேசியுள்ளனர்.

HOT NEWS