மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பாஜகவிற்குத் தாவிய வேட்பாளர்கள்!

06 November 2019 அரசியல்
mnmmpcandidate.jpg

இந்தியாவில் உள்ள அனைத்துக் கலைஞர்களாலும் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர் என்றால், அது கமல்ஹாசன் என்றுக் கூறினால் அது மிகையாகாது. நடிப்பு, பாடல், இயக்கம், எழுத்து என அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதித்தவர்.

அவர், அரசியலில் இறங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை ஆரம்பித்து, சரியாக ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்டது. அதற்குள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்று அசத்தியது. கட்சி ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில், இவ்வளவு வாக்குகளைப் பெற்றதால், அக்கட்சியின் மதிப்பும் செல்வாக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்நிலையில், அக்கட்சியின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மூன்று பேர் தற்பொழுது, முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில், பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அரக்கோணம் வேட்பாளர் திரு. ராஜேந்திரன், கிருஷ்ணகிரி வேட்பாளர் திரு. ஸ்ரீ காருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திரு. ரவி ஆகியோர் தங்களை பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனை தன்னுடைய அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில், பொ.ரா பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, மய்யம் கட்சியின் ஆர்.கே.சுரேஷ் பொ.ரா முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS