சிறுநீர் பைக்குள் மொபைல் சார்ஜர்! புதுவித செக்ஸ் போதையால் சிக்கல்!

08 June 2020 அரசியல்
mobilecharger.jpg

சிறுநீர் பைக்குள் சிக்கிக் கொண்ட மொபைல் சார்ஜரை, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

அசாம் மாநிலத்தினைச் சேர்ந்த ஒருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர், தனக்குத் தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாகவும், அதனால் என்னால் உணவு கூட உண்ண முடியவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால், மருத்துவர்கள் அவருக்கு, எக்ஸ் ரே, சிடி ஸ்கேன், எனப் பலவித முறையில் அவருடைய வயிற்றினைச் சோதனை செய்தனர்.

ஆனால், அவருடைய வயிற்றில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அவருடைய வயிற்று வலித் தீர்ந்தபாடில்லை. இதனைத் தொடர்ந்து, அடிவயிற்றினைச் சோதனை செய்தனர். அதில், அவருடைய சிறுநீர் பையில் செல்போனுக்குப் பயன்படும் சார்ஜர் கேபிள் உள்ளே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

முதலில் மருத்துவர்கள் அவரிடம் சாதாரணமாக விசாரித்தனர். அப்பொழுது, அந்தக் கேபிளை விழுங்கியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கூறுவது போல் விழுங்கியிருந்தால், அந்தக் கேபிள் சிறுநீர் பைக்குச் செல்லாது. வயிற்றுக்கே செல்லும். எனவே, அவர் பொய் சொல்கின்றார் எனக் கண்டுபிடித்தனர். இந்த சூழ்நிலையில், அவரிடம் சரியான உண்மையைக் கூறினால் தான், அதனை அகற்ற இயலும் என்றுக் கூறியிருந்தனர்.

பின்னர், தான் ஆர்கஸித்திற்காக ஆணுறுப்பின் வழியாக செல்போன் சார்ஜரை நுழைத்தாகவும், அது உள்ளே சென்று சிக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதனால், அறுவை சிகிச்சை செய்து அந்தக் கேபிளை அகற்றி உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையினைச் செய்த டாக்டர் இஸ்லாம் இதனை, பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

HOT NEWS