உங்கள் மொபைல் நீரில் விழுந்துவிட்டால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டிலும், என்ன செய்யக் கூடாது என்றுத் தெரிந்து கொண்டாலே, உங்கள் மொபைலைக் காப்பாற்றி விடலாம். ஆம், இப்பொழுது ஸ்மார்ட்போன்கள், மிக நுண்ணிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை.
இவைகளுக்குள் நீர் சென்று விட்டால், பின்னால் வருபவைகளை செய்யக் கூடாது.
1 நீரில் விழுந்த மொபைலை எடுத்து, சார்ஜ் செய்யக் கூடாது. அவ்வாறு சார்ஜ் செய்தால், மொபைல் வெடிப்பதற்கோ அல்லது மொபைல் சர்க்கியூட் செயலிழந்து விடும்.
2 ஹேர் ட்ரையர் வைத்து, மொபைலை சுத்தம் செய்யக் கூடாது. நீரில் விழுந்த மொபைலை ஹேர் ட்ரையர் வைத்து ஒரு சிலர் சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு செய்தால், மொபைல் சர்க்கியூட் எரிந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு.
3 நீரில் விழுந்த மொபைலை, 3.5எம்எம் ஜாக்குடன் உள்ள ஹெட்போன் அல்லது சார்ஜருடனோ இணைக்கக் கூடாது.
4 சிம் கார்டை வெளியில் எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால், சிம் கார்டின் ஓட்டை வழியாக, நீர் உள்ளே செல்வதற்குள் வாய்ப்புகள் உண்டு.
5 நீரில் விழுந்த மொபைலை, முதலில் ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். அதனைப் பயன்படுத்தாதீர்கள்.
6 மொபைலை குலுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால், நீர் மொபைலின் உள்ளே, ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு பரவிவிடும்.
7 பேட்டரியை எடுக்கவோ அல்லது மொபைலைக் கழற்றவோ வேண்டாம்.
8 நல்ல தெரிந்த மொபைல் டெக்னீசியனிடம் கொடுத்து, மொபைலை சரி செய்யலாம்.
9 நீரை வெளியே எடுக்கின்றேன் என நினைத்து, நீங்களாக வாயை வைத்து ஊத வேண்டாம்.
இவ்வாறு செய்தாலே, பாதி பிரச்சனைகளை தடுத்துவிடலாம். நீரில் விழுந்த மொபைலை எடுத்து, ஒரு பிளாஷ்டிக் கவரில் போட்டு, ஹேங்கரில் தொங்க விட வேண்டும். அவ்வாறு செய்தால், இரண்டு நாட்களில் மொபைலில் உள்ள நீர் வெளியேறி விடும். மொபைல் சரியாகிவிடும்.