ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் மீண்டும் வந்தது செல்போன் சேவை!

18 January 2020 அரசியல்
mobile121.jpg

ஜம்மூ-காஷ்மீர் பகுதியில், பல மாதங்களாக தடை செய்யப்பட்டு இருந்த, செல்போன் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் சேவை, மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மூ-காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்டு இருந்த, சிறப்பு அந்தஸ்தினை இந்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதங்களும், கலவரங்களும் ஏற்படாமல் இருக்க, இணைய சேவை, தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து வந்த உலகத் தொடர்பும் துண்டாது என, காங்கிரஸ் உட்பட பல எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மக்களின் பாதுகாப்புக் கருதியே அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இன்று மத்திய அரசின் முக்கிய எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், ஜம்மூ-காஷ்மீர் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக, அரசு கூறியுள்ளது.

இதனிடையே, ஜம்மூ-காஷ்மீரின் முதன்மை செயலர் ரோகித் கன்சால் பேசுகையில், தற்பொழுது வரை தடைசெய்யப்பட்டு உள்ள ப்ரீபெய்டு வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவையானது அனுமதிக்கப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு சிலக் குறிப்பிட்டுள்ள வலைதளங்களையும் தற்பொழுது அனுமதித்துள்ளது.

இதனால், பொது மக்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், ஒரு சில இடங்களில், 4ஜி சேவை அனுமதிக்கப்படவில்லை. மாறாக, 2ஜி சேவையே ஒரு சில இடங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS