கொரோனா வைரஸை எதிர்க்கும் மருந்து ரெடி! அமெரிக்கா சாதனை!

22 May 2020 அரசியல்
vaccinecovid19.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸிற்கு, புதிய மருந்து ஒன்றினை அமெரிக்காவின் மருந்து நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவில் தான், கொரோனா வைரஸானது தன்னுடைய கோரத்தாண்டவத்தினை அரங்கேற்றி உள்ளது. இந்த வைரஸால் அங்கு 80,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ளப் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றன. அவைகளில் மாடர்னா இங்க் என்ற நிறுவனம் தற்பொழுது உலகளவில் முன்னிலையில் உள்ளது.

அந்த நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக, தடுப்பூசியினை உருவாக்கி வருகின்றது. இதற்காக வேகமாகச் செயல்பட்டு வருகின்ற காரணத்தால், அமெரிக்காவின் பாஸ்ட் ட்ராக் என்ற பெயரினையும் பெற்றுள்ளது. இந்த நிறுவனமானது, ஆர்என்ஏவால் ஆன மருந்து ஒன்றினை உருவாக்கி உள்ளது. இந்த மருந்திற்கு mRNA-1273 என்று பெயரிட்டுள்ளது. இந்த மருந்தானது, மனிதர்கள் மீது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டும் உள்ளது.

இந்த மருந்தினை அடுத்தக் கட்ட ஆராய்ச்சிகும் பயன்படுத்தினர். அதில், மூன்று வித அளவுகளில், மூன்று நபர்களுக்கு இந்த மருந்தினை வழங்கினர். அதில், அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பதும், அதனால் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியானது, அவர்களுடைய உடலில் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை மாதம் அடுத்தக்கட்ட ஆய்விற்கு திட்டமிட்டு உள்ளது. அந்த ஆய்வில் நல்ல பலன் கிடைக்கின்றப் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட தன்னார்வலர் குழுவின் மீது இந்த மருந்துப் பயன்படுத்தப்படும். அதிலும் வெற்றிக் கிடைத்துவிட்டால், இதனை மருந்தாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

HOT NEWS