கொரோனா வைரஸ் ஊசி 3வது கட்டத்திற்கு முன்னேற்றம்! அமெரிக்கா சாதனை!

04 June 2020 அரசியல்
covidvaccine19.jpg

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் தன்மையுள்ள தருப்பூசியானது, தற்பொழுது 2வது கட்டத்தினை எட்டியுள்ளதாக மருந்து தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, 60 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் பரவி உள்ளது. இந்த வைரஸால் கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் காரணமாக, உலகின் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவினை கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் வேகமாக ஈடுபட்டு வருகின்றன.

சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னிலையில் உள்ளனர். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்த மருந்தானது, தோல்வியில் முடிந்தது. இந்த சூழ்நிலையில், ரஷ்யாவில் இன்னும் இரண்டு மாதங்களில் மருந்து தயாராகிவிடும் என்று ரஷ்ய விஞ்ஞானி அறிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா இன்க் நிறுவனம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய புரத மருந்தினை அது உருவாக்கி உள்ளதாகவும், அந்த மருந்தானது முதற்கட்டத்தில் வெற்றி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் பயார்ன்டெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருந்தினை உருவாக்கி வருகின்றது. இந்த மருந்தானது, முதலில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டது. அதில், நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த மருந்தானது, தடுப்பு மருந்து அல்ல எனவும், நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வலிமைப் படைத்தது எனவும், இந்த மருந்தினை தன்னார்வலர்கள் மீதுப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட சோதனைக்காக, ஒரு தன்னார்வலக் குழுவினர் மீது சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனையில் 600 முதல் 1000 பேர் பயன்படுத்தப்பட உள்ளது.

இவர்கள் மீது நடத்தப்படும் சோதனை வெற்றி பெறும் பட்சத்தில், இந்த மருந்தானது கடைசியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள் மீது சோதனை செய்யப்படும். பின்னர், இது அரசிடம் விற்பனைக்கான அனுமதிக்கு சமர்பிக்கப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. இதனால், தற்பொழுது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

HOT NEWS