நன்றி சொன்ன டிரம்ப்! பதிலளித்துள்ள பிரதமர்! என் பிரண்ட போல யாரு மச்சான்!

09 April 2020 அரசியல்
modi-trump.jpg

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசாங்கமானது, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையினை வழங்க முன்வந்தது. இதற்கு நன்றி தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், இந்த உதவியானது என்றும் மறக்கப்பட மாட்டாது என்றுக் கூறினார். மேலும், பிரதமர் மோடிக்கு நன்றியினையும் தெரிவித்தார்.

அதற்கு தற்பொழுது பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அதில், அவசரமான சூழ்நிலைகள் தான், நண்பர்களை நெருக்கமாக இணைக்கும். இந்தியா-அமெரிக்கா உறவு தற்பொழுது மேலும் வலுவடைந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிராக, மனிதத்தைக் காப்பாற்ற இந்தியா முடிந்த அனைத்தையும் செய்யும் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS