இந்தியா இஸ்ரோவை நினைத்துப் பெருமைக் கொள்கிறது! பிரதமர் மோடி!

06 September 2019 அரசியல்
vikramlander111.jpg

இஸ்ரோவினை நினைத்து நம் இந்திய நாடுப் பெருமைக் கொள்கிறது, எனப் பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவின் சார்பில், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி சந்திராயன்2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பின்னர் அதன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, அதிலிருந்த விக்ரம் லேண்டர் விண்கலம் வெற்றிகமாகப் பிரிக்கப்பட்டது. இதனிடையே, இன்று நள்ளிரவு நிலவில் இறங்க, 2.1 கிலோ மீட்டர் மட்டுமே, இருந்த நிலையில், லேண்டரில் இருந்து, வர வேண்டிய சிக்னல் கட்டானது. இதனால், இந்த முயற்சித் தோல்வியில் முடிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, நாட்டு மக்களிடம் காலை 8 மணியளவில் பேசினார் பிரதமர் மோடி. அப்பொழுது பேசிய மோடி, இந்த சந்திராயன்2 திட்டத்திற்காக, நம்முடைய விஞ்ஞானிகள், இரவு பகல் பாராது கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பு ஈடு இணையற்றது.

இஸ்ரோ விஞ்ஞானிகளால், நம் நாடு பெருமை கொள்கிறது. தோல்வி என்பது நிரந்தரமல்ல. தற்காலிகப் பின்னடைவு தான். விரைவில், நம் இஸ்ரோ பல புதிய சாதனைகளை விண்வெளியில் நிகழ்த்தும் என்றுக் கூறினார். நம் ஒட்டு மொத்த இந்தியாவும் உங்களுடன் உள்ளது. 130 கோடி மக்கள் உங்களுக்குத் துணையாக உள்ளனர். தேசத்தின் வளர்ச்சியில், இஸ்ரோவின் பங்கு மகத்தானது, அதனை நினைத்து நம் நாடேப் பெருமைக் கொள்கிறது என்றுக் கூறினார். இதனைக் கேட்ட பல விஞ்ஞானிகள், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர்.

HOT NEWS