தீவிரவாதத்தினை இரு நாடுகளும் கடுமையாக எதிர்ப்போம்!

30 October 2019 அரசியல்
modisaudiking.jpg

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்று மூன்றாவது எதிர்கால முதலீட்டு நிறுவனம் நடத்தியக் கூட்டத்தில் பங்குபெற்றார்.

அதில் கலந்து கொண்டு பேசிய பொழுது, சவுதி அரேபியா மற்றும் இந்தியா இரண்டுமே, தீவிரவாதத்தினை எந்த விதத்திலும் அனுமதிக்காது. ஏற்றுக் கொள்ளவும் செய்யாது எனக் குறிப்பிட்டுப் பேசினார். இந்தியா வளர்ந்து வளரும் பொருளாதார நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனை உலக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

பின்னர், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத்தினை சந்தித்தார் பாரதப் பிரதமர். மோடி. அப்பொழுது, அவருக்கு தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கான வாழ்த்துக்களை, மன்னர் தெரிவித்துக் கொண்டார்.

HOT NEWS