காங்கிரஸ் தவிர்த்து நீண்ட நாள் சாதனை செய்த மோடி! வாஜ்பாயினை பின்னுக்குத் தள்ளினார்!

14 August 2020 அரசியல்
narendramodi40.jpg

இந்திய அளவில் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி 4வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் தற்பொழுது வரை, பலப் பிரதமர்கள் இந்தியாவினை ஆட்சி செய்து உள்ளனர். அவர்களில் பலர் முழுமையான ஆட்சியினை வழங்கி உள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சியினரே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றனர். குறிப்பாக, நேருவின் குடும்பத்தினர் தான், மத்தியினை அதிகளவில் ஆட்சி செய்தனர். அவர்களின் சாதனையினை தற்பொழுது பிரதமர் மோடி நெருங்கிக் கொண்டு இருக்கின்றார்.

இந்தியாவின் முதல் பிரமரான ஜவஹர்லால் நேரு, 1947ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை, சுமார் 17 ஆண்டுகள் பிரதமராக ஆட்சி செய்தார். மொத்தம் 6130 நாட்கள் அவர் பிரதமராக பதவியில் இருந்து வந்தார். அதே போல், அவருடைய மகள் இந்திரா காந்தி 1966ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையிலும், பின்னர் 1980ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரையிலும் சுமார் 5829 நாட்கள் ஆட்சி செய்தார்.

அவரைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, சுமார் 3656 நாட்களாக ஆட்சி செய்து மூன்றாவது நீண்ட காலமாக ஆட்சி செய்தவராக மன்மோகன் சிங் இருந்து வருகின்றார். அதே போல், தற்பொழுது பாரதப் பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல் பிரதமராக ஆட்சியில் இருக்கின்றார். அவர் தற்பொழுது நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

காங்கிரஸ் இல்லாத பிரதமராக நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சாதனையினை தற்பொழுது முறியடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS