தாயுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோடி! குஜராத்தில் கொண்டாட்டம்!

18 September 2019 அரசியல்
modimother.jpg

நேற்று பிரதமர் மோடி, தன்னுடைய தாயிடம் ஆசிர்வாதம் பெற்றார். தன்னுடைய 69வது பிறந்தநாளை முன்னிட்டு, சர்தார் படேல் சிலையையும் சென்று பார்த்தார்.

பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின், 69வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று பாஜகவினர் பல விதங்களில் அவருடையப் பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் குஜராத்திற்கு சென்றார் மோடி. அங்கு அமைக்கப்பட்டுள்ள, சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பார்வையிட்டார்.

பின்னர், அங்கிருந்து நர்மதை அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சாரோவார் அணைக்குச் சென்றார். அங்கு, அமைக்கப்பட்டுள்ள, நர்மதா தேவியின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர், தன் தாயை சந்திக்கச் சென்றார் மோடி.

அங்கு அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றார். பின்னர், அவர் தன் தாயுடன் இணைந்து, உணவு அருந்தினார். பின்னர், பாகவினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

HOT NEWS