மோடி கண்டனம்! எதிர்கட்சிகள் ஏன் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதல் பற்றி பேசுவதில்லை!

03 January 2020 அரசியல்
modispeech12.jpg

இரண்டு நாள் பயணமாக, பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உரையாற்றினார்.

முன்னதாக, அவர் சித்தகங்கா மடத்திற்கு சென்று, அங்கு வழிபாடு செய்தார். பின்னர், ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் பயன்படுத்தியப் பொருட்களை வைக்கும், அருங்காட்சியகத்திற்கான கட்டிடத்தின் அடிக்கல்லை நாட்டினார். அவர் துமகூரு நகருக்கு வருவதை அறிந்த மக்கள், ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

பின்னர், நடந்த கூட்டத்தில் பேசும் பொழுது, பாகிஸ்தான் மதம் சார்ந்த நாடு. அங்கு இந்துக்கள் மீதான அடக்குமுறை என்பது அதிகமாக உள்ளது. அங்குள்ள மக்கள் மீது, கொடூரமான தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இதனால், அங்குள்ள இந்துக்கள் அங்கிருந்து, இந்தியாவிற்கு வந்து தஞ்சம் அடைகின்றனர். நம்மை நம்பி, தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பாற்றுவது நம்முடையக் கடமை.

ஆனால், எதிர்கட்சிகள் மக்களை திசைதிருப்புவதற்காக, போராட்டங்களை ஊக்குவிக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டு, மக்களை குழப்புகின்றனர். பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களை நம் நாடு என்றும் கைவிடாது. பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்துக்களைப் பற்றி, எதிர்கட்சிகள் ஏன் குரல் எழுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS