வேஷ்டி சட்டையில் கலக்கும் பிரதமர் மோடி! மாமல்லபுரத்தில் சீன பிரதமர்!

11 October 2019 அரசியல்
modixijingping.jpg

இன்று மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஜீஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து உரையாடினர்.

இன்று காலையில், தமிழகம் வந்த மோடியை, பூங்கொத்து கொடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம் உள்ளிடோர் வரவேற்றனர். அப்பொழுது, கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்து வரவேற்பு அளித்தனர். தமிழகம் வந்த மோடி, பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும், நிகழ்ச்சி நிரல் குறித்தும் கேட்டு அறிந்தார். பின்னர், மதிய வேளையில், இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், அவருடைய காரில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, தனியார் விடுதிக்கு கிளம்பினார். அவருக்கு பாரம்பரிய முறையில், மேள தாளங்கள் முழங்க, பூரண கும்ப மேளத்துடன் மரியாதை செய்து வரவேற்றனர்.

அவர் சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர், மாலையில், மாமல்லபுரம் புறப்பட்டார். அவர் வருவதற்கு முன்னரே, மாமல்லபுரம் வந்த மோடி, அங்கு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர், நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்பொழுது, தமிழக் கலாச்சார உடையான, வேட்டி, சட்டை மற்றும் துண்டுடன் வந்து அசத்தினார்.

மாலையில், தன்னுடைய காரில் வந்த சீன அதிபரை, வரவேற்ற மோடி அவருடன் மாமல்லபுரத்தினை சுற்றிப் பார்த்தார். பின்னர், அங்கு நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டும் வருகின்றார்.

HOT NEWS