பாதர் ஆஃப் இந்தியா! மோடியைப் புகழ்ந்த அமெரிக்க அதிபர்!

25 September 2019 அரசியல்
moditrump.jpg

நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த டிரம்ப், அவரை பாதர் ஆஃப் இந்தியா எனப் புகழ்ந்துள்ளார்.

ஹோஸ்டன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற, ஹோவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது, அமெரிக்க அதிபரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அப்பொழுது, இருவரும் இணைந்து கூட்டாக, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பேசிய டிரம்ப் கடந்த காலங்களை விட, மோடியின் ஆட்சியில் இந்தியாவின் ஒற்றுமை சிறப்பாக உள்ளது. அமெரிக்காவும், இந்தியாவும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். விரைவில், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்தியாவின் அனைத்து மக்களையும், அரவணைத்துச் செல்வதில் மோடி ஒரு தந்தையைப் போல செயல்படுகின்றார். அவர் இந்த உலகின் தந்தையைப் போல செயல்படுகின்றார். அவர் இந்தியாவின் தந்தை (பாதர் ஆஃப் இந்தியா) எனப் புகழ்ந்து தள்ளினார்.

HOT NEWS