சமூக வலைதளங்கள் விட்டு போகும் மோடி! நக்கல் செய்த ராகுல்!

03 March 2020 அரசியல்
modiunga.jpg

விரைவில் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற உள்ளதாக பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நபராகவும், நம்பர் அரசியல் தலைவராகவும் இருப்பவர் பிரதமர் மோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் ஆனதைத் தொடர்ந்து, இவருடைய செல்வாக்கானது உலகளவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அவரும், தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில், புதிய பதிவுகளை வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது புதிய ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் மற்றும் இண்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை விட்டுச் சென்றுவிடலாம் என, நினைக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

அதற்குப் பலரும் தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, வெற்றுப்புணர்வினைக் கைவிடுங்கள். சமூக வலைதளங்களை அல்ல எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது, சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

HOT NEWS