ஆஸ்திரேலியாவுடன் முக்கிய ஒபந்தங்கள்! இணையத்திலேயே ஒப்பந்தமானது!

05 June 2020 அரசியல்
modicii.jpg

நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தினால், உலக நாடுகள் பலவும் தங்களுடைய வெளிநாட்டு விமான சேவையினை நிறுத்தி உள்ளன. இந்தியா உட்படப் பல நாடுகள் தீவிரமாக ஊரடங்கு உத்தரவினைக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிற்கு வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் இருந்தார்.

ஆனால், தற்பொழுது உள்ள மருத்துவ நெருக்கடிநிலைக் காரணமாக அவர் வரவில்லை. அதற்குப் பதிலாக, தற்பொழுது இணைய வழி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மோடி, கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்ததும், ஆஸ்திரேலிய பிரதமர் தன்னுடையக் குடும்பத்தாருடன் இந்தியாவிற்கு வருகைத் தர வேண்டும் என்றுக் கூறினார். பின்னர், இரண்டு நாட்டுத் தலைவர்களும் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், இரு நாட்டுக் கடற்படைத் தளத்தினையும் வர்த்தகத்திற்காக இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்வது, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். பின்னர், இது குறித்து பிரதமர் மோடி டிவிட்டர் தன்னுடையக் கருத்தினை பதிவிட்டார்.

அதில், ஆஸ்திரேலிய பிரதமரும் என் அன்பான நண்பருமான ஸ்காட் மோரிசனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த சந்திப்பு ஒரு சிறந்த விவாதமாக இருந்தது. இது சந்திப்பு, இந்தியா-ஆஸ்திரேலியா உறவில் புதிய அத்யாயமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS