மோடியின் ஏழு அறிவுரைகள்! நீங்கள் பின்பற்றுவீர்களா?

14 April 2020 அரசியல்
modi7request.jpg

இந்தியா முழுவதும், வருகின்ற ஏப்ரல் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படுகின்றது என, இன்று காலையில் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், இந்திய மக்களுக்கு ஏழு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளார். அதன்படி, மூத்த குடிமக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நலப் பிரச்சனை உள்ளவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.

ஊரடங்கிற்கான விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். சமூக விலக்கை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் தயாரித்த மாஸ்க்குகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும்.

ஆரோக்ய சேது செயலியினை டவுன்லோட் செய்து, அதன் உதவியினைப் பெறவும். ஏழை மக்களுக்கு, உணவு உள்ளிட்டவைகள் தந்து உதவ வேண்டும். தொழிலாளர்களை, பணியில் இருந்து நீக்கக் கூடாது. அவர்களுக்கு இயன்ற உதவியினை செய்ய வேண்டும். மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புறவாளர்கள் உள்ளிட்ட முன்னின்று உழைப்பவர்களை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

HOT NEWS