இந்தியா அமைதியை விரும்புகின்றது! அத்துமீறலை ஏற்றுக் கொள்ளாது!

17 June 2020 அரசியல்
modiwarnschina.jpg

இந்தியா அமைதியினை விரும்பும் நாடு எனவும், அத்துமீறலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும், பிரதமர்ம மோடி பேசியுள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு நாட்டு மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவின் 20 வீரர்கள் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். அதே போல், சீனாவின் 35 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்திய முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது கொரோனா வைரஸ் பரவுவது குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு, ஊரடங்கு குறித்தும் பேசினார். இதனைத் தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு செய்தி ஒன்றினை வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்தியா அமைதியினை விரும்பும் நாடு எனவும், ஒரு போதும் அத்துமீறலை ஏற்றுக் கொள்ளாது எனவும், தகுந்த பதிலடியானது கொடுக்கப்படும் எனவும் கூறினார். இந்தியாவின் துணிச்சல், வீரம் பற்றி உலகிற்கு நன்கு தெரியும் எனவும், கோபமூட்டும் நடவடிக்கைகளை இந்திய இராணுவம் பார்த்துக் கொண்டு இருக்காது எனவும் கூறினார்.

இந்திய வீரர்களின் மரணம் மறக்கப்படாது எனவும், அவர்களின் தியாகமானது வீண் போகாது எனவும் கூறியுள்ளார். எவ்வித சூழ்நிலையாக இருந்தாலும், இந்தியா தன்னுடைய பதிலடியினை வழங்க தவறாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று, கூறியுள்ளார். இது தற்பொழுது பதற்றத்தினை மேலும் அதிகரித்துள்ளது.

HOT NEWS