இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்! காஸ்ட்லி கண்ணாடி அணிந்த ஏழைத் தாயின் மகன் வேண்டுகோள்!

30 December 2019 அரசியல்
maankibaat.jpg

இந்த ஆண்டின் கடைசி மான் கீ பாத் நிகழ்ச்சியில், நேற்று பாரதப் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குங்கள் என, அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் பேசும் பொழுது, நம் நாட்டின் இளைஞர்கள், அநீதியையும், ஒழுங்கீனத்தையும் வெறப்பவர்கள், அநியாயம் நடந்தால், தயங்காமல் தட்டிக் கேட்பவர்கள். வரிசையில் நாம் ஒழுங்காக செல்லவில்லை என்றால் கூட நியாயம் என்பதைக் கூறுபவர்கள். மேலும், அதனை வீடியோ எடுத்தும் பரவச் செய்வார்கள்.

உள்நாட்டு உற்பத்தியினைப் பெருக்க வேண்டும் எனவும், அதற்கு இந்தியப் பொருட்களை நாம் வாங்க வேண்டும் எனவும், நான் சுதந்திர தினத்தில் வேண்டுகோள் விடுத்தேன். அதனை மீண்டும் நினைவு கூற விரும்புகின்றேன். மகாத்மா காந்தியும் அதனையேக் கூறினார். அதற்காக மாபெரும் இயக்கம் ஒன்றினையும் அவர் உருவாக்கினார். நாம் அவர் வழியில் செல்ல வேண்டும். இதற்காக, இளைஞர்கள் புதிய குழுக்களை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வருகின்ற புத்தாண்டில், நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். அதற்கான உறுதியினை எடுத்துக் கொள்வோம் எனக் கூறினார். அவர் நடந்த முடிந்த சூரிய கிரகணத்தின் பொழுது, ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுக் கண்ணாடியினை அணிந்திருநார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS