யாரும் உள்ளே வரவில்லை! யாரும் ஆக்கிரமிக்கவும் இல்லை பிரதமர் மோடி பேச்சு!

20 June 2020 அரசியல்
modichina.jpg

இந்தியாவின் எல்லைக்குள் யாரும் உள்ளே வரவில்லை எனவும், யாரும் நம்முடைய இடத்தினை ஆக்கிரமிக்கவில்லை எனவும், இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர்களுடன் மாலையில், கூட்டத்தில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அப்பொழுது இந்தியாவின் 20 முக்கியக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக, அதிமுகவும் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமரின் செயல்களுக்கு, திமுக துணை நிற்கும் என முகஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக சார்பில், ஓ பன்னீர் செல்வம் கலந்து கொண்டனார்.

இவர்களிடம் பேசிய பின்பு, நாட்டு மக்களுடன் வீடியோ மூலம் உரையாடினார் பிரதமர் மோடி. அவர் பேசுகையில், இந்தியாவினுள் யாரும் ஊடுருவவில்லை. யாரும் அத்துமீறி உள்ளே வரவில்லை. இந்தியாவின் ஆயுதப் படை அனைத்திற்கும் தயாராக உள்ளது. இந்தியாவின் ஒரு இன்ச் இடத்தினைக் கூட யாருக்கும் தர இயலாது. அதனை யாரும் பார்க்கவும் கூடாது. ஒரே நேரத்தில், எல்லையின் பலப் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அளவிற்கு, இந்திய இராணுவம் வளர்ந்துள்ளது.

இந்தியாவுடன் அமைதி மற்றும் ஒற்றுமையினை சீனா விரும்புகின்றது. அரசாங்க ரீதியிலும் நாம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். சீனாவிற்கு தகுந்தப் பதிலடி தரப்படும். இந்திய வீரர்களின் வீரமரணம் எப்பொழுதும் வீண் போகாது. அவர்களுடைய குடும்பத்திற்கு இந்தியா துணை நிற்கின்றது.

இந்தியா அமைதியினையும், நட்பையுமே விரும்புகின்றது. அதே சமயம், இந்தியாவின் இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அதனைக் காப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என, பாரதப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

HOT NEWS