ஐக்கிய நாடுகள் சபையில் சீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது என, பாரதப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழா நடைபெற்றது. கொரொனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியானது காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் பாரதப் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய அவர், 1945ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய நாடுகள் சபையின் லட்சியமானது நிறைவேறாமலேயே உள்ளது.
பழைய திட்டங்களை வைத்துக் கொண்டு, தற்பொழுது நிலவுகின்ற சூழ்நிலையினை சமாளிக்க முடியாது. அதற்கு புதிதான சீரமைக்கப்பட்ட திட்டங்களும், செயல்களும் தேவை. அதனை இந்தியா தற்பொழுது தயாரித்து வருகின்றது. இதனை, விரைவில் ஐநாவிற்கு வழங்கும் எனக் குறிப்பிட்டார்.