முதலீட்டாளர்களுக்கு அழைப்பு! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி உரை!

15 November 2019 அரசியல்
modibrics2019.jpg

நேற்று பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய மோடி, இந்தியா முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நாடாக இருப்பதாக கூறினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்று வரும் மாநாட்டில் பேசினார். அதற்கு முன், பிரேசில் பிரதமர் பொல்சோனாரோ, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் ராம்போசா ஆகியோரைச் சந்தித்து பேசினார்.

பின்னர், மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவே, ஒன்றரை லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். மேலும், வரும் 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவினை, 5 டிரில்லயன் பொருளாதாரம் கொண்ட மிகப் பெரிய நாடாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் தான் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஏற்ற சூழல் நிலவுவதாகவும் எனவே முதலீட்டாளர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி, இந்தியாவில் முதலீடு செய்யலாம் எனவும் பேசினார். இந்தியர்களுக்கு பிரேசில் செல்ல விசா தேவையில்லை என அறிவித்த பிரேசில் அதிபர் பொல்சொனாரோவிற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

HOT NEWS