பரிச்சா பே சர்ச்சா மூலம் மோடி பேச்சு! தோல்வியும் வெற்றிக்குத் தான்!

21 January 2020 அரசியல்
modiparicha.jpg

மூன்றாவது வருடமாக இந்த ஆண்டும், பொதுத் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோடி மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

டெல்லியில் உள்ள தலகத்தோர் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுமார் 2,000 பேர் பங்குபெற்றனர். அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் முன்னால், பிரதமர் மோடி பேசினார். அத்துடன் அவர் பேசுவதைக் காண வேண்டும் என, அரசு கூறியதை அடுத்து, நாடு எங்கிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் அவருடையப் பேச்சு டிவி மூலம், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அவர் பேசும் பொழுது, தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. தேர்வு அறைக்குள் செல்லும் பொழுது, ரிலாக்சாக செல்ல வேண்டும். அடுத்தவர்கள் என்ன செய்கின்றார்கள் பற்றி நினைக்கக் கூடாது. உங்களை நம்பி செல்லுங்கள். நீங்கள் படித்ததைப் பற்றி நம்பிச் செல்லுங்கள். இதில் கவலைப்படத் தேவையில்லை என்று பேசினார்.

அப்பொழுது அனைத்து மாணவர்களும், தங்களுடையக் கரகோசத்தினை எழுப்பினர். இந்தியாவின் பலப் பள்ளிகளில் டிவி இல்லை மேலும் இணைய வசதியும் இல்லாத காரணத்தினால், பலராலும் இந்த நிகழ்ச்சியினைக் காண இயலவில்லை. மேலும், தமிழகத்தில் அவர் பேசுவதை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் முழுக்க முழுக்க இந்தியில் பேசியதால், தமிழகம் மட்டுமின்றி, ஹிந்தி தெரியாத மாணவர்கள் வழக்கம் போல், அவர் வாயையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

HOT NEWS