ஐநாவில் யாதும் ஊரே யாவரும் கேளீர்! தமிழில் முழங்கிய மோடி!

28 September 2019 அரசியல்
modiunga.jpg

நேற்று நடைபெற்ற ஐநா சபைக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் மோடி, கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே! யாவரும் கேளீர் என்ற வாசகத்தை, மேற்கோள் காட்டிப் பேசினார்.

சுமார் 15 நிமிடங்கள் பிரதமர் மோடி உட்பட, பல தலைவர்கள் பேசுவதற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனை அவர் கச்சிதமாகப் பயன்படுத்தினார். அவர் பேசும் பொழுது, இந்தியா மற்ற நாடுகளுக்கு, முன்னுதாரணமாக உள்ளது. இந்தியாவில் ஸ்வட்ச் பாரத் என்ற திட்டத்தின், கீழ் சுமார் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின், 150வது பிறந்தநாளை நாம் கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டில் இருந்து, பிளாஸ்டிக்கினை ஒழிப்பதிலும் இந்தியா மிகத் தீவிரமாக செயல்பட உள்ளது. இதனை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும். ஒரு முறை மட்டுமேப் பயன்படுத்தப்படக் கூடிய பிளாஸ்டிக்குகளை அழிக்க வேண்டும். உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் பொருட்டு, இந்தியா சூரிய எரிசக்தியில் முதலீடு செய்ய உள்ளதைச் சுட்டிக் காட்டியும் பேசினார்.

வரும் 2022ம் ஆண்டுக்குள், சுமார் 2 கோடி வீடுகளை, வீடுகள் இல்லாத இந்தியர்களுக்குக் கட்டித்தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சுமார் 15 கோடி வீடுகளுக்கு, சுத்தமான இலவசக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

ஒற்றுமையே வலிமை என்பதனை விளக்குவதற்கு, 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, தமிழ் மேதை கணியன் பூங்குன்றனார், யாதும் ஊரே, யாவரும் கேளீர் என முழங்கியுள்ளார் என்பதனையும் கூறினார்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக இந்தியா மாறுவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

HOT NEWS