மருந்து வரும் வரை சமூக இடைவெளி, முகக் கவசம் அவசியம்! மோடி உரை!

26 June 2020 அரசியல்
modidonation.jpg

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை, சமூக இடைவெளி உள்ளிட்டவைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, பாரதப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற ரோஷ்கர் அபியான் என்ற திட்டத்தினை, காணொலி மூலம் துவக்கி வைத்த பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் உள்ள கிராம விவசாயிகளுடன் வீடியோ காண்ப்ரன்சிங் வாயிலாக, உரையாடினார். அவர் பேசுகையில், கொரோனாவிற்கு எதிராகப் போராடி வரும் உத்திரப் பிரதேச அரசிற்கு, தன்னுடையப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

மேலும், எவ்வாறு முகக் கவசங்களைப் பயன்படுத்துவது என, கிராமத்து மக்களுக்கு தன்னிடம் இருந்து சால்வையை வைத்து செய்துக் காட்டுவதாகக் கூறினார். கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை, சமூக இடைவெளியினை கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை நன்றாக கழுவுதல், ஆறு அடி தூரம் சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் ஆகியவை மிகவும் முக்கியம் என்றுக் கூறினார்.

உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகையானது, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் அளவிற்கு இணையானது. அங்கு தற்பொழுது, கொரோனாவிற்கு 1,30,000 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும் பொழுது, உத்திரப் பிரதேசம் வெகுவாக தப்பித்துள்ளது. உபியில் வெறும் 600 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையை, உத்திரப் பிரதேச அரசு திறம்பட, வேகமாகக் கையாண்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும், உயிரிழப்பு உயிரிழப்புத் தான். உலகின் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS