சொல்வது ஒன்று செய்வது ஒன்று! மோடியினை விமர்சித்த ராகுல்!

01 July 2020 அரசியல்
rahulgandhicovid19.jpg

பிரதமர் மோடி சொல்வதும் ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தற்பொழுது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு நாட்டு இராணுவமும் தங்களுடைய இராணுவ பலத்தினைப் பெருக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தது குறித்து, பிரதமர் மோடி எவ்வித பதிலடியும் தரவில்லை என, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தினமும் இது தொடர்பாக அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றார். இந்த சூழ்நிலையில், நேற்று அவர் புதிதாக கருத்து ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது என விமர்சித்துள்ளார். மேக் இன் இந்தியா என பிரதமர் மோடி கூறுகின்றார்.

ஆனால், அவர் தொடர்ந்து சீனாவில் இருந்துப் பலப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றார். இவ்வாறு மோடி தலைமையிலான பாஜக அரசு, சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், சீனாவில் இருந்து வாங்குவோம் என்ற கொள்கையினை நடைமுறைப்படுத்தி அதனைப் பின்பற்றவும் செய்கின்றார் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

HOT NEWS