பிரதமர் நரேந்திர மோடி வைத்துள்ள வலைதளத்தின் டிவிட்டர் கணக்கு, தற்பொழுது ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
டிவிட்டரில், உலகளவில் பலப் பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. இதனை டிவிட்டர் நிறுவனமும், அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்த கணக்குகளைப் பயன்படுத்தி, பல ஹேக்கர்கள் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தற்பொழுது இந்தியப் பிரதமர் மோடியிடமும் காட்டியுள்ளனர்.
பிரதமர் மோடி நரேந்திர மோடி என்றப் பெயரிலும், நரேந்திர மோடி.இன் என்ற பெயரிலும், இரு அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துள்ளார். இதில், நரேந்திரமோடி_இன் என்ற கணக்கானது, அவருடைய வலைளதளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கணக்கானது, தற்பொழுது ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதனைப் பயன்படுத்து, பிட்காயின் வழங்கும்படி, கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதனை டிவிட்டர் நிர்வாகமும், அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டு உள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று சீனாவின் 118 செயலிகளுக்கு தடை விதித்ததை அடுத்து, இத்தகைய செயல் நடைபெற்றுள்ளதால், இதனை சீன ஹேக்கர்கள் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதே போல், பராக் ஒபாமா, எலன் மஸ்க், ஜெஃப் பிஸோஸ் உளிட்டோரின் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்பொழுது அவருடைய டிவிட்டர் கணக்கானது மீட்கப்பட்டு உள்ளது. அவருடைய கணக்கினை, டிவிட்டர் நிர்வாகம் சரி செய்து ஒப்படைத்து உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.