தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா கடுமையாக போராடும்! தாய்லாந்தில் திருக்குறள் வெளியிட்ட மோடி பேச்சு!

03 November 2019 அரசியல்
modithailand.jpg

கடந்த வெள்ளிக் கிழமை, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அவர் தாய்லாந்தில், நேற்று தமிழ் நூலான திருக்குறள் நூலினை, தாய் மொழியில் வெளியிட்டார்.

பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சாவாஸ்தீ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு இருந்த இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினர் மோடி.

அப்பொழுது, இந்தியா எப்பொழுதும், தீவிரவாதத்திற்கும், பிரிவினை வாதத்திற்கும் எதிராகப் போராடும் என பேசினார். மேலும் பேசி அவர், ஜம்மூ காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது.

புதிய இந்தியாவினை உருவாக்கும் முயற்சியில், தற்பொழுது 130 கோடி மக்கள் ஈடுபட்டுள்ளனர். 5 டிரில்லயன் கோடி பொருளாதாரத்தினை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விரைவில், அது சாத்தியமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியாவில் வந்து தொழில் செய்ய உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தற்பொழுது, இந்தியாவில் முதலீடு செய்யப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் எனக் கூறினார்.

HOT NEWS