பாக் தீவிரவாதத்தை, மோடி பார்த்துக் கொள்வார்! டிரம்ப் பேச்சு!

25 September 2019 அரசியல்
modiinusa.jpg

நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மோடி ஆகியோர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பேசிய டிரம்ப், பாகிஸ்தான் தீவிரவாதத்தை மோடி பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர், கூட்டாக பதிலளித்தனர். அப்பொழுது பத்திரிக்கை நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அமெரிக்காவில் இருந்து சுமார் 50,000 தீவிரவாதிகள் ஐஎஸ் அமைப்பினராலும், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளாலும் தயார்ப்படுத்தப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்றுக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், தீவிரவாதத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது எனவும், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்தை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார் எனவும் கூறினார். மேலும் அவர் பேசுகையில், காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி, பிரதமர் கானும் (இம்ரான் கான்), பிரதமர் மோடியும் அமர்ந்து பேசி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பர் என நம்புகிறேன் எனவும், அது விரைவில் சாத்தியமாகும் எனவும் கூறினார்.

இதற்கு முன் பேசும் பொழுது, பிரதமர் மோடியை பாதர் ஆஃப் இந்தியா எனப் புகழ்ந்தார் டிரம்ப்.

HOT NEWS