மோகன்லால் நடிக்க உள்ள படத்தில், உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜாக்கிச் சான் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கடந்த 2009ம் ஆண்டு, நாயர் ஸான் என்ற திரைப்படம் உருவாக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, அந்தப் படத்தினை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான, நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகின்றது.
கேரளாவில், இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர். இவர், ஜப்பான் சென்று இந்திய விடுதலைக்காக ஆதரவு திரட்டினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றினை படமாக்க உள்ளனர்.
இந்தப் படத்தில், ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயராக, மோகன்லால் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ஜாக்கிச் சான் நடிக்க உள்ளாராம். மேலும், இந்தப் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தின் பட்ஜெட்டானது 400 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளது. இந்தத் திரைப்படத்தினை, ஆல்பர்ட் ஆண்டனி இயக்க உள்ளார்.