கொல்கத்தாவில் உள்ள பிரபல வணிக அலுவலகத்தின் மாடியில் இருந்து, பண மழை பொழிந்துள்ளது.
ஆம், வருமான வரித்துறையினர், கொல்கத்தாவில் உள்ள தனியார் அலுவலகத்தில் சோதனை செய்ய சென்றுள்ளனர். அப்பொழுது, அந்த விஷயத்தினை அறிந்த அலுவலக ஊழியர்கள், தங்களுடைய அலுவலகத்தில் இருந்து பணத்தினை வீசியுள்ளனர்.
மாடிக்கு கீழே இருந்தவர்கள், அந்தப் பணத்தின் பொறுக்கி எடுத்துள்ளனர். அதில், 2,000 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. இது குறித்து, தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்பொழுது, அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.