உட்டா, ரோமேனியாவினைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்மதூண்!

05 December 2020 அமானுஷ்யம்
monolith.jpg

அமெரிக்காவின் உட்டா மாகாணம் மற்றும் ரோமேனியாவின் மலைப் பகுதிகளில் இருந்ததை போன்று, கலிபோர்னியாவிலும் புதிதாக உலோகத் தூண் தோன்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவியிருக்கின்ற நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த தேர்தலின் பரபரப்பு கூட அடங்கவில்லை. இந்த சூழலில், அமெரிக்காவில் அடுத்த பரபரப்பான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ளப் பகுதியில், திடீரென்று உலோகத் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. அந்தத் தூணானது திடீரென்று மாயமானது.

அது மாயமாகி 24 மணி நேரத்திற்குள், அதே போன்று ரோமேனியாவின் மலைப் பகுதிகளில் புதியத் தூண் ஒன்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் நின்று பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். அதுவும் 24 மணி நேரத்திற்குள் காணாமல் போனது. இது பெருமளவில் குழப்பத்தினை ஏற்படுத்தியது. அது எப்படி, காணாமல் போன 24 மணி நேரத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இந்தத் தூண், எவ்வித தடயமும் இல்லாமல் சென்றது எனக் குழப்பம் ஏற்பட்டது.

இந்தக் குழப்பம் தீர்வதற்குள் தற்பொழுது, மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இது போன்ற மற்றொரு உலோகத் தூணானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 10 அடி உயரமுள்ள தூணினை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அருகிலும் நின்று பலரும் செல்பி எடுத்து வந்தனர். இந்த நிலையில், அது வந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் காணாமல் போய் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனை வேற்றுக் கிரகவாசிகளே வைத்துள்ளனர் எனப் பலரும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு சிலர் செய்து வருகின்றர் என ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த உலோகத் தூண் மர்மமானது பெரிய அளவில் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.

HOT NEWS