முதல் முறையாக குழந்தைகள் படம்! மான்ஸ்டர் திரைவிமர்சனம்!

17 May 2019 சினிமா
monstervsbeast.jpg

ரேட்டிங் 3.1/5

எஸ்.ஜே.சூர்யா படம் என்றால், தியேட்டருக்குப் போகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அளவிற்கு அவருடைய்ப பழையப் படங்கள் இருந்துள்ளன. ஆனால், இந்தப் படம் குழந்தைகளே கொண்டாடும் அளவிற்கு, மிக சுத்தமாக எடுத்துள்ளனர்.

முதல் முறையாக யூ சர்டிபிகேட் படத்தில், நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இதுவே, இப்படம் வெற்றி பெறுவதற்குப் போதாதா? படம் நீளமாக உள்ளது மட்டுமே, இப்படத்தின் குறையாக உள்ளது. மற்றபடி, இந்த மான்ஸ்டர் திரைப்படம், இந்த மே மாத விடுமுறைக்கு ஏற்றத் திரைப்படம் என்றுக் கூறினால், அது மிகையாகாது.

அழகிய பிள்ளை என்றக் கதாப்பாத்திரத்தில், நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ஒரு அரசுப் பணியாளர். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். இவருக்கும், அந்த மான்ஸ்டர் என அழைக்கப்படும், எலிக்கும் என்ன சம்பந்தம்? கடைசியில் என்ன நடக்கிறது, என மிக நகைச்சுவையாக எடுத்திருக்கின்றார் இயக்குநர். படத்தில், கருணாகரன் சக ஊழியராக வருகிறார். படம் முழுக்க கலக்கியிருக்கிறார் எனக் கூறலாம். இவர் வரும் நேரங்களில், சிரிப்பிற்கு உத்திரவாதம்.

படத்தின் பாடல்கள், இன்னும் நன்றாக இசையமைத்திருந்தால், கண்டிப்பாக மக்கள் அனைவரிடமும், தானாக இப்படம் சென்று சேர்ந்திருக்கும். விஎஃப்எக்ஸ் காட்சிகளும் சரி, ஒளிப்பதிவும் சரி, மிக நன்றாகவே உள்ளது எனக் கூறலாம்.

படத்தின் கதை என்ன என்றுக் கேட்காதீர்கள். குழந்தைகளுடன், திரையறங்கிற்குச் சென்று பாருங்கள். அனைவரும் ரசிக்கும் விதத்திலேயே, இத்திரைப்படம் உள்ளது.

HOT NEWS