பெண்களுக்குப் பொதுவாக நல்ல உடற்கட்டுடன் உள்ள ஆண்களையே அதிகம் பிடிக்கிறது. இதன் காரணமாகவே சினிமா நட்சத்திரங்கள் சிக்ஸ் ஃபேக் வைக்கின்றனர். மேலும், இதனால் நம்மால் இளமையுடன் நீண்ட நாட்கள் வாழ முடியும். இதனைப் நன்குப் புரிந்து கொண்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள் ஜிம்மிற்குச் சென்று தன் உடலை உறுதியாக்குகின்றனர். இதில் ஒரு சிலர் மிகத் தீவிரமாக தன் உடலை மிருகத்தைப் போல் மாற்றுகின்றனர். இவ்வாறு மாற்றியவர்களில் உலகில் உள்ள அனைவராலும் அறியப்பட்டவர்கள் மார்ட்டின் ஃபோர்ட் மற்றும் மோர்கன் அஸ்டே. ஆவர்.
இவர்கள் உடலைப் பல திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். இவர்கள் இருவரிடையே தான் இன்று போட்டி நிலவி வருகிறது. இந்த இருவரைப் பற்றி இங்கு பார்ப்போம்.
மார்ட்டின் ஃபோர்ட்பார்ப்பதற்கு அரக்கனைப் போன்று காட்சியளிக்கும் இவர் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் உடலுக்காகவே இவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இவரின் முக்கிய வேலை என்ன தெரியுமா? உடற்பயிற்சி செய்வது மட்டுமே. இவர் பாஃடி பில்டிங்கிற்காகவே வாழ்கிறார் என்றுக் கூட கூறலாம்.
இவரைப் பார்த்துப் பல ஆயிரம் பேர் உடற்கட்டமைப்புக்காக ஜிம்முக்கு செல்கின்றனர் என்றால் இவரின் மதிப்பை நீங்களேத் தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களைப் போன்றே இவரும் ஊக்க மருந்தைப் பயன்படுத்தினாலும் இன்று வரை இவர் எந்த மாதிரியான மருந்தைப் பயன்படுத்துகிறார் என யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் இவரைப் போன்று உடல் அமைப்பைப் பெறுவது மிகக் கடினம் ஆகும்.
பார்ப்பதற்குக் மிகப் பலசாலியாகக் காட்சியளிக்கும் இவர் மார்ட்டின் ஃபோர்ட்டின் மிகக் கடுமையானப் போட்டியாளர் ஆவார். இவரும் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருடைய உடல் சற்றுப் பருமானாக காணப்பட்டாலும், இவர் எந்த விதத்திலும் மார்ட்டின் ஃபோர்ட்டிற்குச் சளைத்தவர் அல்ல.
விடாமுயற்சி மற்றும் கடின முயற்சி இருந்தால் மட்டுமே இவரைப் போல உடலை ஏற்ற முடியும். இல்லை என்றால் சிரமம் தான். இவர்கள் அனைவருமே ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதை அவர்களே ஒப்புக் கொண்டாலும், எந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள் என யாருக்கும் தெரிவித்ததில்லை.