மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக, நடிகை நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்ததாக, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பெருமிதமாக கூறியுள்ளார்.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், இந்தப் படத்தில், அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் கடுமையான விரதத்தினை நடிகை நயன்தாரா மேற்கொண்டார். இது என்னை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
தொழில் மீது அவர் வைத்துள்ள காதல் என்பது மிகவும் பெரியது. அது எண்ணை மகிழ்வடைய வைக்கின்றது. முதன்முறையாக, நயன்தாராவினை ஒரு தெய்வீகத் தன்மையுடன் நான் பார்க்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கின்றார். இந்தப் படம், வருகின்ற கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.