ஆர்ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன்! நயன்தாரா நடிக்கின்றார்!

11 November 2019 சினிமா
mookuthiamman.jpg

லேடி சூப்பர்ஸ்டார், என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா, தற்பொழுது படு பிஸியாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார், விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் உட்பட மிகப் பெரிய படங்களில் நடித்து வரும் நயன், புதியதொரு படத்தில் இணைந்துள்ளார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நயன்.

இப்படத்தினை, என் ஜே சரவணனும், எல்கேஜி பட நடிகரும் பிரபல பேச்சாளருமான ஆர் ஜே பாலாஜியும் இணைந்து இயக்க உள்ளனர். மேலும், ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் நடிக்கவும் உள்ளார். இதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

HOT NEWS