பல யானைகள் கொலை செய்யப்பட்டது அம்பலம்! விரியும் விசாரணை!

04 June 2020 அரசியல்
elephantgroup.jpg

கேரளாவில் அண்ணாச்சி பழத்தில் வெடி வைத்து, கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், பல யானைகள் இது போன்று கொலை செய்யப்பட்டு இருக்கும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வன விலங்குகள் பலவும், தற்பொழுது சாலைகளில் சாவகாசமாக நடமாடுகின்றன.

கடவுளின் தேசம் என்றுக் கூறப்படும் கேரளாவில், கர்ப்பிணி யானைக்கு அண்ணாச்சிப் பழத்தில் வெடியினை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளனர். இதனை நம்பி அந்த யானையும் உண்டுள்ளது. அந்த அண்ணாச்சி பழமானது, வாயில் வெடித்து சிதறியது. இதனால், அந்த யானையின் வாய் கிழிந்து, குளத்திற்குள் நின்றபடியே உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுக்க கடுமையான அதிர்வலைகளையும், எதிர்ப்பினையும் உருவாக்கி உள்ளது.

இது குறித்து, கேரள அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் இது கேரளாவில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று இருப்பது உறுதியாகி உள்ளது. காட்டுப்பன்றிகளுக்கு வைக்கும் வெடியினை, இவ்வாறு யானைகளுக்கும் கொடுத்து கொலை செய்து வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட குழுவே இந்த செயலில் ஈடுபட்டு வருவதும், தற்பொழுது தெரிய வந்துள்ளது. இதனால், அவர்களைக் கைது செய்வதற்கு, கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS