கொரோனா வைரஸால் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்!

04 February 2020 அரசியல்
coronavirusold.jpg

கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 437 பேர் மரணமடைந்து உள்ளனர். மரணமடைபவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக, தற்பொழுது வரை 21,000 பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்படலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக, சீனாவின் பல பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீனாவின் எல்லைப் பகுதிகளை, பல நாடுகளும் அடைத்து உள்ளன. சீனாவினைத் தவிர்த்து, மொத்தம் 27 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சீனாவின் 80% மக்களுக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. தற்பொழுது வரை, இந்த வைரஸ் காரணமாக மரணமடைந்து இருக்கும் 75% பேர், 60 வயதினைக் கடந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு உள்ளனர்.

கடந்த 20 நாட்களில், சீன அரசாங்கமே எதிர்பார்க்காத அளவிற்கு, இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாக, அந்த நாடே அறிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக, சீனா உடனான தன்னுடைய எல்லைப் பகுதியினை, ரஷ்ய அரசாங்கம் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS