மகனை மீட்டத் தாய்! 1400 கிமீ ஸ்கூட்டியில் பயணம்! நெகிழ்ச்சியான செய்தி!

11 April 2020 அரசியல்
mother1400travel.jpg

இந்தியா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் தேவையில்லாமல் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது.

தெலுங்கானாவில் வசித்து வருபவர் ரஷியா பேகம். 48 வயதான இவர், ஹைதராபாத் நகருக்கு அருகில் உள்ள நிஸாமாபாத்தில் உள்ள பள்ளியில், தலைமை ஆசிரியையாக உள்ளார். அவருடைய கணவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னாள் மரணமடைந்து உள்ளார். தன்னுடைய இரண்டு மகன்களுடன் இவர் வசித்து வருகின்றார்.

இவருடைய மகன் ஒருவர், தற்பொழுது ஆந்திராவில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுபோக்குவரத்துத் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவருடைய மகனால் தன்னுடைய சொந்த ஊருக்கு வர இயலவில்லை. இதனை முன்னிட்டு, தாய் பேகம் தன்னுடைய மகனை அழைத்து வர முயற்சி செய்துள்ளார். முதலில் காரில் அழைத்து வர யோசித்து உள்ளார்.

ஆனால், கடைசியில் டூவிலரில் சென்று அழைத்து வர முடிவு செய்துள்ளார். இதற்காக, அருகிலுள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுவிட்டு, தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்பியுள்ளார். பையில், ரொட்டி முதலானவைகளை எடுத்துக் கொண்டு, வாகனத்தில் கிளம்பியுள்ளார். சரியாக 1400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மகனை அழைத்து வந்த அவர், மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு தன் மகனை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு அழைத்து வந்துள்ளார்.

இந்த சம்பவம், அப்பகுதியில் இருப்பவர்களிடம் நெகிழ்ச்சியினை உருவாக்கி உள்ளது. இது குறித்து பேகம் கூறுகையில், இரவு நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி இருந்தன. அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. தற்பொழுது என் மகனை அழைத்து வந்துவிட்டேன். இது எனக்கு, மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியிருக்கின்றார்.

HOT NEWS