இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, தற்பொழுது உலகின் ஐந்தாவது மாபெரும் பணக்காரராக வளர்ச்சி அடைந்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடையக் கடன்களை கடந்த மார்ச் மாதம் அடைத்ததால், அந்த நிறுவனம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது. அத்துடன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜியோவில், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட உலகின் மாபெரும் நிறுவனங்கள் அடுத்தடுத்து முதலீடு செய்தன. இதனால், ஜியோவின் மதிப்பு அதிரடியாக உயர்ந்தது.
இதனால், அம்பானியின் சொத்து மதிப்பானது, 4.44 சதவிகிதம் அதிகரித்தது. உலகின் பல முன்னணி பணக்காரர்களை முந்திய அம்பானி, தற்பொழுது 5.61 லட்சம் கோடிகளுடன் உலகளவில் ஐந்தாவது மாபெரும் பணக்காரராக உள்ளார். அமெரிக்க மதிப்பில் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வைத்துள்ள அம்பானி, தற்பொழுது ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வருகின்றார்.