உலகப் பணக்காரர்கள் வரிசையில் 4வது இடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானி, தற்பொழுது 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுவின் தலைவருமான முகேஷ் அம்பானி, தற்பொழுது உலகின் முதல் பணக்காரர்கள் வரிசையில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார். எண்ணெய் வியாபாரம், ரிட்டெய்ல் தொழில், ஜியோ தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவத்தினர் தலைவராகி இருக்கின்றார் முகேஷ் அம்பானி. ஜியோ நிறுவனத்தினை ஆரம்பித்தப் பிறகு, அசுரத்தனமாக வளர்ந்தார் முகேஷ் அம்பானி. தற்பொழுது ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தினையும், ஜியோ ரீட்டெய்ல் என்றப் பெயரில் ஆரம்பித்து நடத்தி வருகின்றார்.
இந்த நிறுவனமானது, கடந்த 25 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியினை ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த 3 ஆண்டுகளில் தான் நல்ல வளர்ச்சியானது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளானது இந்த ஆண்டின் ஆரம்பத்தில், 2,369.35 ரூபாய்க்கு விற்பனை ஆகியது. இது, இந்தியாவின் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஜியோ ரீட்டெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் விளைவாக, அம்பானியின் சொத்து மதிப்பானது குறைய ஆரம்பித்தது.
கிஷோர் பியானியின் ப்யூச்சர் குரூப் பங்குகளை வாங்கும் முயற்சியில், அம்பானி ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அங்கு சறுக்கல் ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம், ப்யூச்சர் க்ரூப் பங்குகளை வாங்குவதில் மும்முரமாக செயல்பட்டது. இருப்பினும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தன்னுடைய நிறுவனத்தினை தர மாட்டேன் என, கிஷோர் பியானி திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
இதனைத் தொடர்ந்து, அம்பானியின் மதிப்பானது குறைய ஆரம்பித்து உள்ளது. 90 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து வந்த அவருடைய சொத்து மதிப்பானது, தற்பொழுது 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இதனால், அவர் உலகின் நான்காவது பெரிய பணக்காரர் என்ற இடத்தில் இருந்து, 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.