ஒரு லட்சம் கோடியினை இழந்த முகேஷ் அம்பானி! சரிவினை நோக்கி ரிலையன்ஸ்!

03 November 2020 தொழில்நுட்பம்
mukeshambani1121.jpg

ரிலையன்ஸ் நிறுவனம் தற்பொழுது பெரிய சரிவினை சந்தித்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகளவில் 5வது இடத்திலும், ஆசியா மற்றும் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள பணக்காரரான முகேஷ் அம்பானி, தற்பொழுது ஒரு லட்சம் கோடியினை இழந்து இருக்கின்றார் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இருந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில், பெரிய அளவிலான சரிவினைச் சந்தித்து உள்ளன.

இந்த சரிவால் ஒரே நாளில் மாபெரும் இழப்பினை, முகேஷ் அம்பானி சந்தித்து உள்ளார். ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. எண்ணெய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ள நிலையில், அதனை ஊரடங்கின் காரணமாக, பொதுமக்கள் பெருமளவில் வாங்கவில்லை. வாகன உற்பத்தி குறைவு, ஊரடங்கு, பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு காரணமாக, பெட்ரோல் பயன்பாடு சர்வதேச அளவில் குறைந்துள்ளது.

இதனால், விற்பனை குறைந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் குறைந்துள்ளன. முகேஷ் அம்பானியின் வியாபார யுக்தி மற்றும் திட்டங்களால் தான், இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே, கடந்த காலாண்டில் பெருமளவில் லாபம் குறைந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

HOT NEWS