தொடர்ந்து இந்திய சினிமாவில் மீ டூ பிரச்சனையானது, நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இது குறித்து, சக்திமான் புகழ் முகேஷ் கன்னாவின் கருத்தானது, பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.
சக்திமான் நாடகத்தில் நடித்து, இந்திய அளவில் பிரசித்தி பெற்றவர் முகேஷ் கன்னா. அவர் சமீபத்தில் மீ டூ குறித்து, பதிவு ஒன்றினை வெளியிட்டார். அதில், ஆண் பெண் ஆகிய இருவருமே வேறுபட்டவர்கள். வீட்டினையும், குடும்பத்தினையும் பார்த்துக் கொள்வது தான் பெண்களின் வேலை. இப்படியொருக் கருத்தினைக் கூறுவதால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பெண்கள் எப்பொழுது வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்களோ, அப்பொழுது தான், மீ டூ உள்ளிட்ட்டப் பிரச்சனைகள் பிறக்க ஆரம்பித்தது.
தற்காலத்தில் பெண்கள் ஆண்களின் தோள் மீது ஏறிச் செல்வது குறித்து பேசி வருகின்றனர். பெண் சுதந்திரம் பற்றி பேசுகின்றனர். ஆண்கள் செய்வதை எல்லாம் பெண்களும் செய்யலாம் என்றக் கருத்து நிலவுகின்றது. அங்கு தான் இந்தப் பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கின்றது. ஆண் ஆண் தான் பெண் எப்பொழுதுமே பெண் தான் எனக் கூறியிருக்கின்றார். இதற்கு தற்பொழுது பெண்கள் அமைப்பு, கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது.